Saturday, August 6, 2011

The Chaser [ Korean Movie 2008 ]

“The Chaser” - Tamil Review
original title “Chugyeogja"
  • Genre : Action,Thriller
  • Release date : February 14, 2008 
  • Runtime :123 mi
  • Country: South Korea
  • Language: Korean

                    

   பரபரக்கும் திரைகதை , ரத்தத்தை சில்லிட வைக்கும் காட்சி அமைப்பு , மிக சிறந்த ஒளிபதிவு தட தடக்கும் வேகம் ,மனதை கலங்க வைக்கும் மென் சோகம்  இவை எல்லாம் கலந்த ஒரு திரில்லர் படம் பார்க்க விரும்புபவரா நீங்கள் ? அப்படி என்றால் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமிது !!  

   ஹீரோ இயோம் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாமா ஆகும் ஒரு போலிஸ்காரன் (  போலிஸ் மாமா இல்லை,விபசார மாமா !) போன் செய்தால் வீடு தேடி பெண்களை அனுப்பும் சேவையை ?! செய்து வருகிறார் . இதற்கிடையே அவரிடம் வேலை செய்யும் பெண்கள் இருவர் காணமல் போகிறார்கள் .ஒரு நாள்  பெண்ணை அனுப்ப சொல்லி ஒரு போன் வருகிறது.இயோமும் அனுப்புகிறார். அனால் அனுப்பிய பின்தான் முன்பு 2 பெண்கள் காணமல் போனபோதும் இதே நம்பரில் இருந்து கால் வந்ததை உணர்கிறார். பழைய டிடெக்டிவான ஹீரோ அந்த பெண்ணை தேடி போகிறான். புத்திசாலியான இயோம் பெண்களை கடத்தியவனை கண்டும் பிடிக்கிறான் ஆனால் அவனிடம் மாட்டிய பெண்களின் கதி என்ன , அவர்களை இயோம் காப்பற்றினான என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ....   

 படத்தில் நல்ல நடிப்பு , இயக்கம் ,இசை , படத்தின் வேகத்திற்கு துணை நிற்கும் சிறந்த எடிட்டிங் மற்றும் ஒளிபதிவு இருந்தாலும் இவை எல்லாவற்றையும் மிஞ்சும் திரைகதை தான் இப்படத்தின் மிக பெரிய பலம். யூகிக்கவே முடியாத அளவிற்கு அடுத்த அடுத்த காட்சிகள் நகர்வது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.கொலைகாரனை கைது செய்தற்கும் பின்பு அவன் மீதான குற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என விடுவிப்பதற்கும் உள்ளூர் அரசியலை காரணமாக காட்டி இருப்பது புத்திசாலித்தனம். மொத்த படமும் ஒரே இரவில் நடப்பதால் திரைகதையில் எக்ஸ்பிரஸ் வேகம். முன்பே சொன்னது போல் நல்ல ஒளிபதிவும் , திறமையான எடிட்டிங்கும் இதற்கு துணைநிற்கின்றது.  



   படத்தின் ஹீரோவாக நடித்து இருபவர் கிம் யூன் -சாக் , மனுஷன் நடிப்பில் பிரமாத படுத்தி இருக்கிறார் . இப்படத்திர்காக அவர் கொரியன் பிலிம் அவார்ட்டும் வாங்கி இருக்கிறார் .இப்படம் சியோலில் இருந்த உண்மையான சீரியல் கில்லர் யோ யங் சூல் என்பவன் நடத்திய கொலைகளை மையபடுத்தி எடுக்க பட்ட படமாகும். ஹாலிவுட்டில் இதைபோன்ற சைக்கோ,சீரியல் கில்லர்  படங்கள் பல வந்தாலும் அவற்றில் இல்லாத யதார்த்தம் இப்படத்தில் இருக்கிறது.

 பி.கு : இந்த படத்தை "Warner Brothers"  ஏற்கனவே வாங்கிவிட்டார்கள் ,ஹீரோவாக லியநார்டோ டிகாப்பிரியோ நடிக்க இருக்கிறார். ஆனா நம்மாளுங்க ஹாலிவுட்காரங்கள விட இந்த விஷயத்தில் செம ஸ்பீடு . ஆமா இந்தில கொஞ்ச நாள் முன்னாடி ரிலிசான படமான ‘ Murder – 2 ‘ இப்படத்தோட மட்டமான காப்பி. 

நிச்சயம் பார்க்க வேண்டிய மிக சிறந்த த்ரில்லர் படம்.(Strictly not for children below 18 and weak hearted)

Rating :
        


 : 7.8 / 10

Cast & Crew  
Thechaser-Jung-woo Ha.jpg
Kim Yun-SeokHa Jung-WooSeo Young-Hee
Jung-HoJi Young-MinMi-Jin


Directed by Na Hong-jin 
Screenplay by Na Hong-jin 
Cinematography by Lee Seong-Je


No comments:

Post a Comment