மயிராடவில்’ மூழ்கியிருந்தான். முள்ளிவாய்க்கால் துயரம் முடிந்து ஓராண்டு
ஆகிறது. காட்டிக்கொடுத்தவர்கள்.. அடுத்து
யாருக்கு என்ன பதவி வாங்கலாம்.. அடுத்த பாராட்டு விழா எங்கு.. என்று
சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். போர்க்குற்றம் என்றார்கள்..
விசாரணை என்றார்கள்.. ஆனால் எதும் நடந்து விடவில்லை.. வழக்கம் போலவே மறதி
குணம் அதிகம் கொண்ட தமிழினம்.. வலி சுமந்த வாரமாக அனுசரித்து விட்டு..
அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்று யோசிக்க
ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது தொப்புள் கொடி உறவான தாய்
தமிழகத்தில்.. எவ்வளவு கேவலமாக நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள்...கலகக்காரன் முத்துக்குமாரின் மூலம் உருவான எழுச்சியை எப்படி
முடக்கினார்கள்.. என்பதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதில்
உறுதியாய் இருந்தேன். தமிழகத்தில் வெளிவரும் இதழ்களிலேயே.. குமுதத்தில்மட்டுமே இந்த நாடகங்களை கடுமையாக விமர்சித்து கார்ட்டூன்கள் வெளியாயின.. ஈழப்பேரழிவு நடந்து முடிந்து ஓராண்டு ஆகிறது.. இதையொட்டி
தமிழகத்தில் ஓட்டுப்பொறுக்கிகள்.. நடத்திய நாடகங்களை.. பதிவு செய்த எனது
கார்ட்டூன்கள் ’ஈழம் ஆன்மாவின் மரணம்’ என்ற பெயரில் கார்ட்டூன் தொகுப்பாக
குமுதம் பு(து)த்தகத்தில் இருந்து வெளிவந்துள்ளது. ஒரு துரோக வரலாற்றை
பதிவு செய்ய உதவியாக இருந்த குமுதத்திற்கு மனமார்ந்த நன்றி..
------
’ஈழம் ஆன்மாவின் மரணம்’ - பாலா,வெளியீடு : குமுதம் பு(து)த்தகம்
கடந்த மே மாதம் நடந்த படுகொலைகளைக் கண்டு எந்த சாமானிய தமிழருக்கும் உள்ளம் கொதிக்கவே செய்தது. கதறியவர்கள் பலர், கண்ணீர் விட்டவர்கள் பலர். ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லையென்றாலும், மனசுக்குள் அழுதுதான் தீர்த்தவர்கள் பலர். அவர்கள் அத்தனை பேரையும் உங்களின்”ஈழத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது இங்கு தமிழன் ’மானாட மயிராடவில்’ மூழ்கியிருந்தான்.”என்ற ஒரு வாக்கியம் அவமானப்படுத்துகிறது.
ஈழம் ஏதோ உங்களுக்கு மட்டுமே சொந்தமான பிரச்சினை போல பேசுகிறீர் தோழரே!இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தமிழர்களை திட்டி தமிழர்களிடமே அரசியல் நடத்துவீர்கள் தோழர்களே! ஈழம் குறித்த உங்கள் கவலையும் அக்கறையும் புரிந்துகொள்ளும் அதே வேளையில், உங்கள் ஆற்றாமையையை புரிந்துகொள்ளும் அதே வேளையில் இப்படி நீங்கள் எழுதவதையும் பேசுவதையும் பார்க்க கோபமே மிஞ்சுகிறது. யார்தான் என்ன செய்துவிட்டார்கள்? அல்லது நீஙக்ள் தான் என்ன செய்துவிட்டீர்கள் கொத்துகொத்தாக மடிந்த உயிர்களை காப்பாற்ற? வெறும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டஙக்ளும் அவர்களின் உயிர் போவதை தடுக்கவிலலையே.தமிழர்கள் மானாட மயிலாட பார்க்கிறார்கள் என்றால்.. அவர்கள் என்ன செய்வார்கள்? போய் மூலையில் உட்காரச் சொல்கிறீர்களா? தமிழர் ரசனை இப்படி இருக்கிறதே என்று எப்போதும் கவலைப்படுங்கள்.ஈழம் குறித்துப் பேசவில்லை என்பதற்காக மானாட மயிலாட பார்க்கிறவன் என்று திட்டுகிறீர்கள். பேசுவதற்கு தமிழர்களுக்கு தளம் இருக்கிறதா? உங்களைப்போல சாமானிய தமிழர்களுக்கு இணையம் தெரியுமா இப்படி மின்னஞ்சல் அனுப்ப. அல்லது மேடையிருக்கிறதா பொதுவில் பேச. என்ன தளமிருக்கிறது களமிருக்கிறது பேச. தனக்குத் தெரிந்தவர்களிடம் வீட்டில், குடும்பத்தாரிட்ம், நண்பர்களிடம் அவர்களின் ஆற்றாமையையும் இயலாமையும் கொட்டித்தீர்த்தார்கள் தான்.
சும்மா எப்போதும் தமிழர்களை திட்டவேண்டியது. நீங்கள் தமிழர்தானே? என்ன செய்ய முடிந்தது உங்களால் அல்லது என்னால்? உட்கார்ந்து அழுவதைத் தவிர இன்று வரை. என்ன போராடி என்ன ஆனது? கண்ணீரில் முடிந்ததுதானே மிச்சம். சும்மா தமிழன் அப்படி இருக்கிறான் இப்படி இருக்கிறான் ஆனால் ஈழம் குறித்து எதுவும் கவலைப்படவில்லை என்று பொங்கி விமர்சனம் செய்வதை விட்டுவிடுங்கள்.உங்களையெல்லாம் போல பொதுவில் வந்து ஈழம் குறித்து அக்கறையாக இருப்பதை வெளியில் வந்து காட்டிக்கொள்ளவில்லையே தவிர ஒவ்வொரு தமிழரும், மனிதத்தன்மையுள்ளவனாக இருக்கும் பட்சத்தில் தனது குடிசையிலோ அல்லது கோபுரத்திலோ மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் குமைந்துகொண்டும் மனசுக்குள் அழுதுகொண்டும்தானிருந்தார்கள்.
சாமானிய தமிழர்களை திட்டுவதற்கு உங்களுக்கு எப்படி மனசு வருகிறது? என்ன முடியும் அவர்களால்? ஒருவேளை கஞ்சிக்கு வழியற்று இருப்பவர்களைப் பார்த்து எப்படி இப்படி உங்களால் திட்ட முடிகிறது. விட்டுவிடுங்கள். பாவம் தமிழர்கள். அவர்கள் ஈழத்திலிருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்தாலும்.
உங்கள் உணர்வுகளை வேறு வகையில் வேறு இடங்களில் அதிகாரத்தை கையில்வைத்திருப்பவர்களிடம் காண்பியுங்கள்.
No comments:
Post a Comment