தெய்வ திருமகள் பட டிரைலரிலேயே இது ''I Am Sam " படத்தின் அப்பட்டமான காப்பி என்பது தெரிந்ததால் எனக்கு இப்படத்தை பார்ப்பதில் விருப்பமில்லாது இருந்தது.ஆனாலும் நண்பர்கள் கூறியதாலும் ,விகடனில் 50 மார்க் கொடுத்து இருந்ததாலும் பார்க்க போனேன். டைட்டில் கார்டில் கூட "I Am Sam " படத்திற்கு நன்றி என்றோ அப்படம் ஒரு inspiration என்றோ போடாதது கோபத்தை உண்டாக்கியதால் என் மூளை ஆரம்பத்தில் இருந்து இரண்டு படங்களையும் கம்பேர் செய்து கொண்டே இருந்தது.
இதனால் படத்தில் ஒன்றுவது மிகுந்த சிரமமாய் இருந்தது.காட்சிகள் போக போக மனம் கிருஷ்னாவையும் நிலாவையும் நேசிக்க ஆரம்பித்தாலும் "I Am Sam" பட காட்சிகள் நினைவில் தோன்றி இது என்ன இருந்தாலும் அதன் காப்பி தானே என்று இம்சை படுத்தி கொண்டே இருந்தது.
ஆனால் அந்த கடைசி கோர்ட் சீனில் அப்பாவும் மகளும் சைகையில் பேசிக்கொள்ளும் அந்த ஒரு காட்சியில் அனைத்தையும் மறந்து மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்குவதை கட்டுபடுத்த முயன்று தோற்றேன்.தியேட்டரில் பலரது நிலையும் அதுதான்.அதுவே இயக்குனர் விஜயின் வெற்றி. காப்பி அடிக்கப்பட்டு வருகிற குப்பை படத்தையெல்லாம் விட அன்பை பரப்பும் இப்படம் எவ்வளவோ மேல்.அறிவை வைத்து இப்படங்களை ஒப்பிடுவதை விட்டு அன்பை போதிக்கும் இது போன்ற படங்களை வரவேற்பதில் தப்பொன்றும் இல்லை என்றே தோறுகிறது.I Am Sam .படத்தில் மகள் கேரக்டர் தன் தந்தைக்காக சொல்லும் ஒரு வரியே இவ்விரு படங்களை ஒப்பிடும்போதும் தோன்றுகிறது. அவ்வரி " All you need is love" .
No comments:
Post a Comment